காரைக்கால் கிளிஞ்சல் மேடு சுனாமி நகரைச் சேர்ந்த மணிவேல் (39) என்ற மீனவர், தனது மகன் ஈஸ்வரனுக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீன்பிடி தடைகாலம் காரணமாக தொழிலுக்கு செல்லாத நிலையில், மகனின் உடல்நிலை பாதிப்பைக் கண்டு வேதனையடைந்த மணிவேல் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.