புதுச்சேரி: ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

76பார்த்தது
புதுச்சேரி: ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அறிவுறுத்தலின் பேரில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் 15 ஆம் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி