புதுச்சேரி: கழிவுநீர் பராமரிப்பு இயந்திரங்கள் பயன்பாட்டிற்காக தொடக்கம்

59பார்த்தது
புதுச்சேரி: கழிவுநீர் பராமரிப்பு இயந்திரங்கள் பயன்பாட்டிற்காக தொடக்கம்
புதுச்சேரி நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்புகள் பொதுப்பணித்துறையால் கழிவுநீர் பராமரிப்பு இயந்திரங்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை மேம்படுத்துவதற்காக ரூ.3,21,48,960/-க்கு வழங்கப்பட்டு இயந்திரங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களை முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரில் இன்று கொடியசைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி