காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நல்லாட்சி வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பாக இன்று (டிசம்பர் 25) காளிகுப்பம், மீன்வளப் பயிற்சி நிலையத்தில், மண்டபத்தூர், காளிகுப்பம் மற்றும் அக்கம்பேட்டை மீனவ கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சித்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.