காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூய தேற்றரவு அன்னை ஆலய பங்கு தந்தை பால்ராஜ் குமார், இணை பங்கு தந்தை சாமிநாதன் செல்வம், ஆன்மிக குரு பன்னீர் ராஜ் ஆகியோர் சிறப்பு திருப்பலியினை நிறைவேற்றி வைத்து கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியையும் நடத்தி வைத்தனர். இதில் திருப்பலி முடிந்து அலங்கரிக்கப்பட்ட குடிலில் இயேசு கிறிஸ்து பிறக்கும் நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.