காரைக்காலில் "மக்களை தேடி மாவட்ட ஆட்சியர்" நிகழ்ச்சி இன்று நிரவி கொமியூன் பஞ்சாயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் ஆய்வு மேற்கொண்டார்.