முதல் உலகப்போர் நிறைவு பெற்றதன் 107-வது நினைவு நாள் இன்று புதுச்சேரியில் அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள பிரெஞ்சு போர் வீரர் நினைவுத் தூணில் இந்தியாவிற்கான பிரெஞ்சுத் தூதர் தியரி மாத்தூ மற்றும் புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டுத் துணைத் தூதர் திரு. எட்டியென் ரோலண்ட்-பியக், புதுச்சேரி அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆகியோர் மலர் வளையம் வைத்து முதல் உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, இந்தியா, பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.