புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சங்கத்தினர் கடந்த 12ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 5-வது நாளாக சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டம் தொடர்ந்தது. முதல்-அமைச்சர் அறிவித்தபடி டிரைவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ரூ. 10 ஆயிரம் சம்ளம், போனஸ், நிலுவை சம்பள உயர்வு மற்றும் மாதந்தோறும் சம்பளம், பண பலன்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.