காரைக்கால் திருநள்ளாறில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில், சுற்றுலா வழிகாட்டிகள் என்ற பெயரில் பக்தர்களிடம் பணம் பறித்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், வழிகாட்டிகளாக செயல்பட்ட பெண்கள், திருநங்கைகள் மற்றும் அவர்களுக்கு உதவிய கோயில் ஊழியர்கள் 3 பேர் என மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கையால் கோயில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.