புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத்துறை, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் தயாரிக்கப்படும் FORCIP-500 மற்றும் CETEZON ஆகிய இரண்டு மாத்திரைகளின் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. குஜராத்தின் ஹெல்த் ஹேர் பார்முலேசன் நிறுவனத்தின் FORCIP-500 மற்றும் மத்திய பிரதேசத்தின் சூப்ரெக்ஸ் லேபோரெட்டரிஸ் நிறுவனத்தின் CETEZON ஆகிய மாத்திரைகளின் தரத்தில் குறைபாடு கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை விற்கவோ அல்லது இருப்பு வைக்கவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.