புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் 203ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் 29ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு 11 மணிக்கு புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இந்த மின் அலங்கார சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.