புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் கட்சியின் 15-ம் ஆண்டு விழா கடந்த 7-ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என். ஆர். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட என். ஆர். காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி பேசும்போது, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் என். ஆர். காங்கிரஸ் தமிழகத்திலும் போட்டியிடும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்தவர்கள் மற்றும் இளைஞர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழிலதிபர் பரத் தலைமையில் என். ஆர். காங்கிரஸில் இணையும் விழா நடைபெற்றது. புதுச்சேரி கோரிமேடு அப்பா பைத்தியசாமி கோவிலில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அவர்கள் என். ஆர். காங்கிரஸில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக்கொண்டனர்.