மூன்றாவது தேசிய கர்லிங் சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி ராஜீவ் காந்தி உள் விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் அரியானா சிக்கிம், மணிப்பூர், அருணாச்சல பிரதேஷ், இமாச்சலப் பிரதேஷ், மத்திய பிரதேஷ், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உள்ளிட்ட 22 மாநிலங்களைச் சேர்ந்த 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அதன்படி இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் ஜூனியர் பிரிவில் ஆந்திர மாநிலம் முதல் இடமும், சப் ஜூனியர் பிரிவில் தமிழ்நாடு இரண்டாம் இடமும் பெற்றது. இதேபோன்று பெண்கள் பிரிவில் புதுச்சேரி அணி தங்கப் பதக்கத்தையும், ஆந்திரா அணி வெள்ளி பதக்கத்தையும் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இறுதி போட்டியில் புதுச்சேரி மற்றும் ஆந்திர அணிகள் மோதியது. இதில் புதுச்சேரி அணி தங்கப் பதக்கத்தை வென்றது. அதே போன்று ஓவர் ஆல் போட்டியில் ஹரியானா அணி சேம்பன்ஷிப்பை தட்டிச் சென்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு விருதுகளையும் கோப்பைகளையும் வழங்கி கௌரவித்தார்.
இந்த போட்டியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை தலைவர் வினோத், பொதுச்செயலாளர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.