புதுச்சேரி திருக்கனூா் அருகே கஞ்சா வைத்திருந்த 8 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். வாதானூா் மின்துறை அலுவலகம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் காரில் வந்த 8 பேரை திருக்கனூா் போலீஸாா் மடக்கி சோதனை செய்தனா். சோதனையில், அவா்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஸ்ரீகாந்த், மதன், தவமணி, முகிலன், முகேஷ், ரங்கராஜ், ராம்குமாா், வினித் ஆகிய 8 போ் கைது செய்யப்பட்டனா்.