புதுச்சேரி: மதுபோதையில் காவலரிடம் வாக்குவாதம் செய்த நபர் கைது

548பார்த்தது
புதுச்சேரியில், சாலையில் சென்ற பொதுமக்கள் மீது எச்சில் துப்பியதை தட்டிக் கேட்ட போக்குவரத்து காவலரிடம், தலைக்கேறிய மதுபோதையில் இருந்த ஒருவர் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பொதுமக்கள் ஒன்று கூடுவதைக் கண்டதும், அந்த நபர் தன் மீது தவறு இல்லை என கூறியது வேடிக்கையாக இருந்தது. பெரியகடை போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டதால் அவர் மீது வழக்கு பதியப்படவில்லை.

தொடர்புடைய செய்தி