புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி, எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு சமுதாயங்களைச் சார்ந்த தலைவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் மற்றும் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொறுப்பாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கவிக்கரமன், மாநில துணைத் தலைவர் அம்மாவாசை, OBC அணி மாநிலத் தலைவர் கோவேந்தன் கோபதி ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், 'உங்கள் விருப்பம்' வாக்குறுதி படிவங்களும் பெறப்பட்டன.