புதுச்சேரி கடற்கரையில் ஒதுங்கிய சிலை

594பார்த்தது
புதுச்சேரி கடற்கரையில் ஒதுங்கிய சிலை
புதுச்சேரி - கடலுார் சாலை கிருமாம்பாக்கம் அருகே மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரை பகுதியில் வியாழன் மாலை ஒரு கல் நந்தி சிலையும், 50 மீட்டர் தொலைவில் மற்றொரு சுவாமி சிலையும் கிடந்தது. தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். சிலைகள் அருகே சாக்கு பைகள் மற்றும் நான்கு சக்கர வாகன தடயங்கள் இருந்தன. யாரோ சிலைகளை வீசிச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. போலீசார் சிலைகளை கைப்பற்றி பாகூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.