மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், பெருமதிப்பிற்கும், பாசத்திற்கும் உரிய எடப்பாடியார் அவர்களின் உத்தரவின்பேரில், புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் மற்றும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஆகியோரின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி முத்தியால்பேட்டை கழக அலுவலகத்திலிருந்து மாநில கழக துணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து மறைமலை அடிகள் சாலை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து காமராஜர் சாலையில் உள்ள பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இதன்பின் காந்தி வீதி திருக்குறள் மணிக்கூண்டு அருகே வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாநில கழக துணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வையாபுரி மணிகண்டன் அவர்கள் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கழக முன்னோடிகள், கழகத்தின் மூத்த நிர்வாகிகள்உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.