அரியாங்குப்பம் பி.சி.பி. நகர் 3வது குறுக்கு வீதியைச் சேர்ந்த தம்பதி ராஜேஷ்- கமலி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் ராஜேஷின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைக் கவனித்துக்கொள்ள கமலி ஆஸ்பத்திரிக்குச் சென்றார். நேற்று முன்தினம் மாலை ராஜேஷும் ஆஸ்பத்திரிக்குச் சென்ற நிலையில் வீட்டில் குழந்தைகள் 2 பேர் மட்டுமே தனியாக இருந்தனர். அப்போது வீட்டின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்து குடிசைவீடு முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.
இதனால் வீட்டில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமானது. இதற்கிடையே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடிசையை அதிமுக மாநிலக் கழகப் பொருளாளர் ரவி பாண்டுரங்கன் நேரில் பார்வையிட்டு அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் பண உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருள் உள்ளிட்ட பொருள் உதவியையும் வழங்கினார். அருகில் தொகுதிச் செயலாளர் ராஜா மற்றும் அவைத் தலைவர் ராஜேந்திரன், வார்டு செயலாளர் பாலு, ஜெயக்குமார் மற்றும் அஜித்குமார், முத்துலிங்கம், கணபதி, பரமசிவம், காத்தவராயன் மற்றும் தொகுதிக் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.