புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றி புதியவை அமைக்கவும், மின் கம்பிகளுக்கு மேல் செல்லும் மரக்கிளைகளை அகற்றவும், எரியாமல் உள்ள ஹைமாஸ் விளக்குகளை மாற்றி புதிய விளக்குகளைப் பொருத்தவும் கோரி அதிமுக மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமையில் அக்கட்சியினர் அரியாங்குப்பம் மின்துறை அலுவலகத்தில் இளநிலை பொறியாளரை சந்தித்து மனு அளித்தனர்.