புதுச்சேரி மின்துறையில் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 73 இளநிலைப் பொறியாளர்களில், 67 பேருக்கு ஏற்கனவே பணி நியமனம் வழங்கப்பட்டது. அதில் 63 பேர் பணியில் சேர்ந்தனர். பின்னர், பிற அரசுப் பதவிகளில் தேர்வு செய்யப்பட்டதால் ஏற்பட்ட 10 காலியிடங்களை இணைத்து, இன்று புதுச்சேரி சட்டமன்ற அலுவலகத்தில் 15 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மின்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.