மார்ச் 1 ஆம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி வருகையை முன்னிட்டு, லாஸ்பேட் விமான நிலைய மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா மற்றும் மாநில தலைவர் வி. பி. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் ஜான் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சாய் சரவணன், கல்யாணசுந்தரம், செல்வம், தீப்பாய்ந்தான், ரிச்சர்ட் ஜான் குமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.