புதுச்சேரி முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்களை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஜெனரல் திரு. சுதாகர் மற்றும் கூடுதல் இயக்குநர் திரு. P. அரவிந்தன் ஆகியோர் இன்று (28.05.2026) புதுச்சேரி சட்டப்பேரவையில் சந்தித்துப் பேசினர். போதைப்பொருள் ஒருங்கிணைப்பு மைய அமைப்பின் (NCORD) கூட்டத்தை முதலமைச்சர் தலைமையில் நடத்துவது குறித்து இச்சந்திப்பின் போது முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.