புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் நாளை (ஏப்ரல் 9) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில், 1099 வாக்குச்சாவடிகளில் 209 பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. 30 வாக்குச்சாவடிகள் மகளிராலும், 15 இளம் ஊழியர்களாலும், 2 மாற்றுத்திறனாளிகளாலும் நிர்வகிக்கப்படும். கடந்த சட்டமன்ற தேர்தலில் 82.2% வாக்குப்பதிவு நடந்த நிலையில், இந்த முறை 90% மேல் வாக்குப்பதிவு எதிர்பார்க்கப்படுகிறது. 12591 தபால் வாக்குகளும் பதிவாகி உள்ளன. கீழூர் அரசு பள்ளி, வ. உ. சி அரசு பள்ளி மற்றும் காரைக்கால் அரசு பள்ளி என 3 தனித்துவமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.