புதுச்சேரியில் அமைச்சரவை அமைப்பதில் முதலமைச்சர் ரங்கசாமி தாமதம் செய்வதாகக் கூறப்படும் நிலையில், தனக்கு அமைச்சர்
பதவி வேண்டாம் என லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார். தனக்கு அமைச்சர்
பதவி வழங்குவதால் தாமதம் ஏற்படுவதாகக் கேள்விப்பட்டதாகவும், அப்படி என்றால் வேறு ஒருவருக்கு வாய்ப்பளித்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், லட்சிய ஜனநாயக கட்சியை தமிழகத்திலும் விரிவுபடுத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.