புதுச்சேரியில் வரும் 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நான்கு நாட்கள் திரைப்பட விழா நடைபெறுகிறது. இதற்கான லோகோவை முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டார். இந்த விழாவில் 8 மொழிகளில் 45 படங்கள் திரையிடப்படுகின்றன. கடற்கரை காந்தி திடல், காமராஜ் மணிமண்டபம், அப்துல் கலாம் அறிவியல் மையம், அலையான்ஸ் பிரன்சிஸ் அரங்கம் ஆகிய நான்கு மையங்களில் படங்கள் காட்டப்படும். மேலும், 2024-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜிதர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கும், 2025-ம் ஆண்டிற்கான விருதை கடல் கன்னி திரைப்படத்திற்கும் வழங்கப்பட உள்ளது.