இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கத்தின் நிறைவு விழா மங்கலம் கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வர் விஜயகுமார் வரவேற்புரை ஆற்றினார். நில உபயோகத் திட்டம் மற்றும் தரக்கட்டுப்பாடு கூடுதல் வேளாண் இயக்குனர் ஜெயசங்கர், ஆத்மா திட்ட இயக்குனர் மற்றும் பயிற்சி வழி தொடர்பு திட்டம் & கூடுதல் வேளாண் இயக்குனர் ஜாகிர் உசேன், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் வசந்தகுமார், வாழ்த்துரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துறை செயலர் நெடுஞ்செழியன், சிறப்புரையாற்றினார். வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், தலைமை உரையாற்றி, விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வில்லியனூர் ஒதியம் பட்டு அரியூர் திருக்காஞ்சி கூடப்பாக்கம் மற்றும் இருளன் சந்தை பகுதிகளை சார்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் துணை வேளாண் இயக்குனர் கலைச்செல்வி நன்றி உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வில்லியனூர் உழவர் உதவியாக வேளாண் அலுவலர் உமாராணி, உதவி வேளாண் அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் களப்பணியாளர்கள் செய்திருந்தனர்.