புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் போலி கணக்கு தொடங்கி ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோ அழைப்புகள் வழியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த திண்டுக்கல் கல்லூரி மாணவர் அருண் என்பவரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளியைக் கண்டறிந்து அவரிடமிருந்த 7 மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகளைப் பறிமுதல் செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.