சென்னையில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு, தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா மற்றும் புதுச்சேரி மாநில தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் இதில் பங்கேற்றனர். எதிர்வரும் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.