புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காததை கண்டித்து முதலமைச்சர் ரங்கசாமி தேர்தலை புறக்கணித்தால், காங்கிரஸ் கட்சியும் அவருக்கு ஆதரவாக தேர்தலை புறக்கணிக்கும் என காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காததால் முதலமைச்சர் ரங்கசாமி கூறியபடி அவர் தேர்தலை புறக்கணித்தால் அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் துணை நிற்கும் என்றும், நாங்களும் தேர்தலை அவருக்காக புறக்கணிப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.