இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட முத்திரையர்பாளையத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார மையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம் எம்எல்ஏ இதில் கலந்துகொண்டு பணிகளைத் துவக்கி வைத்தார். மேலும், தனபாலன் நகர் விரிவு பகுதியில் 5 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை தடுப்புச்சுவர் கட்டும் பணியையும் அவர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.