புதுச்சேரியில் இரவு முதல் பெய்து வரும் தொடர்மழை

0பார்த்தது
தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இரவிலிருந்து தற்போது வரை புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

தொடர்புடைய செய்தி