புதுவை ஆன்லைன் மோசடி குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை

0பார்த்தது
புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் ஆடைகள் வாங்க முயன்ற பலர் மோசடிக்கு ஆளாகியுள்ளனர். முதலியார்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 5 ஆயிரம் அனுப்பியும் ஆடைகள் கிடைக்காததால் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதேபோல் அரியாங்குப்பத்தை சேர்ந்தவரிடம் ரூ. 17,800, லாஸ்பேட்டையை சேர்ந்தவரிடம் ரூ. 12 ஆயிரம், பாகூரை சேர்ந்த பெண்ணிடம் ரூ. 1,000 என மொத்தம் ரூ. 35,800 மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி