புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக, லைட்டிங் பேனர் மற்றும் ஒலிபெருக்கியுடன் கூடிய வாகனப் பிரச்சாரம் சுகாதாரத்துறையில் இன்று துவக்கப்பட்டது. சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வெள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கொடியசைத்து இந்த விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பொதுமக்களிடையே நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.