சினிமா நடிகரை பார்த்து கட்சி தொடங்கிய இயக்கம் அல்ல திமுக

1பார்த்தது
சினிமா நடிகரை பார்த்து கட்சி தொடங்கிய இயக்கம் அல்ல திமுக
புதுவையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் என்றும், எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் விளிம்பில் பேசுவதாகவும் தெரிவித்தார். சினிமா நடிகரை பார்த்து கட்சி தொடங்கிய இயக்கம் அல்ல திமுக என்றும், இந்திய வரலாறு, சுதந்திரப் போராட்ட வரலாறு, இந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழர் வரலாறு தெரியாமல் தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் சிறு பிள்ளைத்தனமாக விளையாட்டாக பேசுவதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி