புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி
திமுக சார்பில், கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் விழா மற்றும் இலவச மோர் பந்தல் திறப்பு விழா மணிக்கூண்டு அருகே நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,
திமுக மாநில அமைப்பாளர் சிவா கலந்துகொண்டு கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு மோர், இளநீர் மற்றும் தர்பூசணி வழங்கும் இலவச மோர் பந்தலை அவர் திறந்து வைத்தார். இந்த விழாவில் தொகுதி மற்றும் மாநில
திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.