புதுச்சேரியில் தற்போதுள்ள 10.21 லட்சம் வாக்காளர்களில், 9 லட்சத்து 76 ஆயிரத்து 747 எஸ்.ஐ.ஆர். கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 5 லட்சத்து 89 ஆயிரம் படிவங்களின் தரவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. ஜவஹர் தெரிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர். படிவம் பெறாத அல்லது சமர்ப்பிக்காத வாக்காளர்களின் பெயர்கள் டிசம்பர் 9-ம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது என்றும் அவர் கூறினார்.