புதுச்சேரியில் நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய கோரி திராவிடர் கழகம் சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சிவ. வீரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக மாநில அமைப்பாளர் இரா. சிவா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராக கண்டன உரையாற்றினர். இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.