புதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ராஜன் (எ) பவளராஜ், நேற்று இரவு நெருப்புக்குழி மைதானத்தில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, முன்விரோதம் காரணமாக நண்பரும் ரவுடியுமான பழனிமுருகன் மற்றும் கூட்டாளிகளால் கத்தி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சமாதானம் பேசுவதாகக் கூறி மது விருந்துக்கு அழைத்துச் சென்று இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை போலீசார் தலைமறைவாக இருந்த பழனிமுருகன், சிவா, கமலேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.