காரைக்காலில் நடமாடும் மின்னணு வாக்கு இயந்திர வாகனம்

0பார்த்தது
காரைக்காலில் நடமாடும் மின்னணு வாக்கு இயந்திர வாகனம்
வரும் 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளும் முறை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடமாடும் வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இஷிதா ராட்டி இன்று தொடங்கி வைத்தார். காரைக்கால் மாவட்டம் முழுவதும் செல்லவிருக்கும் இந்த வாகனங்கள் மூலம் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாயிலாக நேரடி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி