புதுச்சேரியில் புதிதாக இயக்கப்பட்ட மின்சார பேருந்துகளை இயக்குவதில் இருந்து ஊழியர்கள் 10 நாட்களிலேயே வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டுக்கு இணையான ஊதிய நிர்ணயம் மற்றும் தினப்படி வழங்காததால் பேருந்துகளை இயக்கவில்லை என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், மின்சார பேருந்துகள் இயக்கப்படாமல் பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.