புதுச்சேரி, ஆரியபாளையம் சாராய வடி ஆலை நிர்வாக இயக்குனர் விக்ராந்த், மூன்று ஆண்டு லாப ஈவு தொகையாக ரூ. 5,47,49,928-க்கான காசோலைகளை முதல்வர் ரங்கசாமியிடம் இன்று வழங்கினார். இச்சமயத்தில், துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்எல்ஏ கல்யாண சுந்தரம் மற்றும் தலைமைச் செயலாளர் சரத் சவுகான் ஆகியோர் உடனிருந்தனர்.