புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெண் சுற்றுலா பயணி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். கடலோர காவல் படையினர் பலமுறை எச்சரித்தும், அனுமதி இன்றியும், பாதுகாப்பு உடை இன்றியும், உரிமம் இல்லாமலும் படகு சவாரிக்கு அனுமதித்ததால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.