புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் முன்பு பாஜக இளைஞர் அணியினர் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மாறி மாறி கற்களை வீசி தாக்கிக்கொண்டதில் பலருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.