புதுச்சேரி முத்தியால்பேட்டை அருகே கழிவுநீர் வாய்க்காலில் ஆண் ஒருவர் விழுந்ததாக கிடைத்த தகவலின் பேரில் அவரை மீட்க சென்ற தீயணைப்பு வாகனம், சாலையோரம் ஒதுங்கிய கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் ஏறி நின்றதில் ஆறு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.