புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் இன்று காலை சாரை பாம்பு புகுந்தது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து ஓடினர். வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து பாம்பை பத்திரமாகப் பிடித்தனர். கிராமப்புற விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்யும் இந்த சந்தையில், பாம்பின் நடமாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.