புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாகூர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்க டோக்கன்களை விநியோகிக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தேர்தல் அதிகாரிகள், ரூ.1500 மதிப்புள்ள டோக்கன்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இது தேர்தல் விதிமீறல் என கருதப்படுகிறது. மேலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் இதுப்போன்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.