புதுச்சேரி வீராம்பட்டினம் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தேர்வுகளில் தோல்வி அடைவதாகக் கூறி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து பள்ளி வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ தட்சணாமூர்த்தி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன் ஆகியோர் ஆசிரியர் பற்றாக்குறை சரி செய்யப்படும் என உறுதியளித்தனர்.