புதுச்சேரி வில்லியனூரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்காமீசுவரர் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, இன்று திருத்தேர் திருவிழா நடைபெற்றது. கோவில் வாசலில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். கிழக்கு மாட வீதியில் தொடங்கிய தேர், நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது.