இந்திய அரசின், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணிகள் புதுச்சேரி மாநிலத்தில் இன்று (17. 05. 2026) தொடங்கியது. பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையதளத்தில் தகவல்களை பதிவேற்றம் செய்யும் சுய கணக்கெடுப்பு (Self-enumeration) முறையை மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திரு K. கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தின் இயக்குனர் திரு சுந்தரேஷ் பாபு, கூடுதல் மாவட்ட ஆட்சியர் திரு. சுதாகர் மற்றும் இணை இயக்குனர் திருமதி புவனேஸ்வரி, ஆகியோர் உடன் இருந்தனர்.